• Breaking News

    Wednesday, April 15, 2015

    இலங்கையர்கள் கைகளில் அதிகளவு, ஸ்மார்ட் போன்களை காண விரும்புகிறேன் - இது ரணிலின் ஆசை

    இலங்கையில் செல்போன்களை பயன்படுத்துவோரின் கைகளில் ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்து முன்னேற்றமடைந்த நிலைமையை காண தான் விரும்புவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
    எல்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
    அங்கு மேலும் கருத்து வெளியிட்ட பிரதமர், பெந்தர பிரதேசத்தில் இருந்து கொக்கல வரையில் சுற்றுலாத் தொழில்த் துறை வலயம் ஒன்றும் உருவாக்கப்படும்.
    நாட்டிற்கு வந்து தண்ணீரை மாத்திரம் பருகி விட்டு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு பதிலாக நாட்டுக்கு வந்த பணத்தை செலவிடும். சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    இதன் மூலம் கிடைக்கும் அந்நிய செலவாணியின் மூலம் சிறிய கைத்தொழிலாளர்களை முன்னேற்றுவதே தமது நோக்கம் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.


    KBK NEWS©

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel