உயிரியல் யுத்தம் (Bio war)
--------------------------
தற்பொழுது இலங்கையில் சடுதியாக பரவி வருகின்ற காய்ச்சல் பலமட்டங்களிலும் பீதியை கிளப்பியுள்ளது. அதிலும் குறிப்பாக சில இறப்பு சம்பவங்கள் சற்று திகமாகவே கிலி கொள்ளச்செய்கிறது.
இன்னும் இக்காய்ச்சல் டெங்கு காய்ச்சல் என்று கருதியே சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெங்கு காய்ச்சல் பரவுவதில் இலங்கை கொண்ட முன்னேற்றமே இவ்வாறு எண்ணுவதற்கு ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது.
உண்மையில் Aedes albopictus (ஈடீஸ் அல்போபிக்டஸ்), Aedes aegypti (ஈடீஸ் ஈஜிப்டி) போன்ற நுளம்புகளால் காவப்படுகின்றன Arbo virus (ஆபோ வைரஸ்) மனித உடலினுள் சென்று குருதியில் உள்ள WBC (வெண்குருதி சிறுகலங்களை) அழிக்கும் பொழுது இந்த டெங்கு காய்ச்சல் (Dengue fever) ஏற்படுகிறது.
* கண்ணின் பின்புறத்தில் கடும் வலி
*கடுமையான முன்பக்க தலைவலி
*தசை,மூட்டு வலி
*சிவப்பு நிற புள்ளிகள் உடலில்
ஏற்படல்
*வாந்தி, குமட்டல் ஏற்படல்
*சடுதியாக அதிகரிக்கும் காய்ச்சல்
* சிலவேளை சிறுநீருடன் குருதி
கசிவு
மேற்சொன்ன அடையாளங்களையும் அறிகுறிகளையும் கொண்டதே டெங்கு காய்ச்சல் ஆகும். இக்காய்ச்சல் ஏற்பட்டவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படாதவிடத்து உயிரிழப்பு நேரிடலாம்.
ஆனால் தற்பொழுது டெங்கு காய்ச்சல் பரவுகின்ற அதேவேளை அதிகமான நபர்களுக்கு டெங்கு காய்ச்சலை உண்டு பண்ணும் Arbo virus இல்லை என்று குருதி பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அது ஒரு புதுவகை வைரஸ் (Virus) என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலை அறிவதற்கு சாதாரண குருதிப்பரிசோதனைகளில் கண்டறிய முடியாது.
அதனை கண்டறிய 1300/= ரூபா பெறுமதியான குருதிப்பரிசோதனையின் மூலம் கண்டறியலாம். மேலும் டெங்கு காய்ச்சல் ஏற்பட்ட ஒருநபரின் உடலில் இருக்கின்ற எந்தவொரு உடற்கலத்தை (Cell) பரிசோதனைக்கு உட்படுத்தும் பொழுது Arbo virus உண்டா? இல்லையா? என கண்டறியலாம்.
டெங்கு காய்ச்சல் என்று சொல்லப்பட்ட 200 நோயாளிகளை குருதிப்பரிசோதனைக்கு
உட்படுத்திய பொழுது அதில் 75% டெங்கை தோற்றுவிக்கும் Arbo virus அல்லாத பிறிதொரு நோயாக்கி வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக MRA REPORT (Megnatic Resonance Angiography) அறிக்கைகள் மூலம் அறியக்கிடைக்கின்றது.
இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு காய்ச்சல் ஏற்பட்டவர்களுக்கு
*அதிக தலைவலி
*தசை, மூட்டுவலி
*உடற்சோர்வு
*சிலருக்கு அம்மை போன்ற
கொப்புளங்கள் தோன்றுதல்
*சிலருக்கு வாந்தி
போன்ற அடையாளங்கள் ஆளுக்காள் வேறுபடுகிறது. இந்த புதிய வகை நோய் தொற்று பெரும்பாலும் முஸ்லிம் சனத்தொகை செறிவு கொண்ட இடங்களிலே பரவியுள்ளது. இதன் மூலம் முஸ்லிம்கள் தமிழர்களையும், சிங்களவர்களையும் பார்க்க சுத்தம் அற்றவர்கள் என்று ஒரு கள ஆய்வு குறிப்பிடுகின்றது.
ஆனாலும் இன்னொரு கோணத்தில் சிந்திக்கின்ற பொழுது இந்த வைரஸ் திட்டமிட்ட அடிப்படையில் பரப்பட்டிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகவே காணப்படுகிறது.
ஏனெனில் இந்த காய்ச்சல் பரவிய சில இடங்களை பார்க்கும் பொழுது அது முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்ற அல்லது சிறுபான்மை சமூகம் செறிவாக வாழ்கின்ற பகுதியாகவே இருக்கின்றது. உதாரணமாக மூதூர், கிண்ணியா, அநுராதபுரத்தில் முஸ்லிம்கள் செறிவாக வாழும் பிராந்தியம், பேருவளை சீனங்கோட்டை, கிருஸ்தவகள் செறிந்து வாழும் மமன்னார் பேசாலை போன்றவற்றை குறிப்பிடலாம்.
மேலும் இக்காய்ச்சல் ஏற்பட்டு மீள உயிர் பிழைக்கும் நபர்களின் இனப்பெருக்க திறன் பெருமளவு குறைவதாகவும் வைத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இது சிறுபான்மை சமூகத்தின் இனப்பரம்பலை இல்லாமல் செய்யும் ஒரு வழியாக இருக்கலாம். இதற்கு அரசு கூட மறைகரம் நீட்டி இருக்கலாம் என யூகிப்பதில் தவறில்லை எனலாம்.
சுமார் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் அதிக குழந்தைகளை பெறும் பெரும்பான்மை பெண்களுக்கு ஏறத்தாழ 100000/= ரூபா பெறுமதியான பணப்பரிசுகள் வழங்கப்பட்டது. ஆனால் முஸ்லிம் பெண்கள் மகப்பேற்றின் போது அதிகமாக (சிசேரியன்) அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளை பெற்றெடுத்தனர் இவ்வாறே இன்றும் ஏதாவது ஒரு காரணம் காட்டி குழந்தைகளை பெற வைத்தியசாலைகளில் அனுமதி அளிக்கப்படுகின்றனர். இவ்வாறு ஒரு பெண் 3குழந்தைகளையே கூடியளவு பெறமுடியும் ஆக இதுவும் ஒரு வகையில் இனபரம்பலை கட்டுப்படுத்தும், அழிக்கும் செயற்பாடே ஆகும்.
இன்னொரு கோணத்தில் சிந்திக்கும் பொழுது இந்நோய்க்கிருமி வெளிநாட்டு சதிகளால் பரப்பபட்டிருக்கலாம்.யாதெனில் காலணித்துவம் உலகில் அழிக்கப்பட்டாலும் நவகாலணித்துவம் இன்னும் இருந்து கொண்டு இருக்கிறது.
வல்லரசுகள் நலிந்த அரசுகளை தம் வசப்படுத்த ஆயுத யுத்தங்களை கைவிட்டுவிட்டு
1.பொருளியல் யுத்தம் (Economy
war)
2.உயிரியல் யுத்தம் ( Bio war)
போன்ற யுத்தங்களை கையாளுகின்றன.
பொருளியல் யுத்தமென்பது ஒரு நாட்டின் உற்பத்திநாடுகளை மற்றொரு நாட்டிற்கு ஏற்றுமதி செய்து அந்நாட்டை அடிமை ஆக்குவதாகும். உயிரியல் யுத்தம் என்றால் உயிர் அங்கிகளை பிராணிகளை பிறிதொரு நாட்டின் மக்கள் மத்தியில் அனுப்பி நோயை, உயிராபத்தை உண்டு பண்ணுதல் ஆகும்.
இதில் உயிரியல் யுத்தம் என்பது மிக குரூரமானது. பண்டைய காலத்திலிருந்தே இந்த கொடிய விஷப்பாம்புகளையும் எதிரிகள் மீது அனுப்பி போரில் வெற்றிகொள்ளும் முறை இருந்திருக்கிறது.
பீரங்கி போன்ற குழாய்களில் பூச்சிகளையும், தேள்களையும், தேனிக்களையும் அடைத்து உஷ்னமூட்டி எதிரிகள் மீது எறிந்து எதிரிகளை அழிக்கும் முறை நைஜீரியாவில் இருந்துள்ளது.
விஷ எறும்புகளையும் தேனிக்களையும் எதிரிகள் மீது ஏவிவிட்டு எதிரிகளை அழிக்கும் முறை "மாயன் " இனத்தவர்கள் கொண்டிருந்தனர்.
மேலும் மூஸா நபியின் பிரார்த்தனையின் பிரகாரம் பிர்அவ்னின் சமூகத்திற்கு எதிராக இறைவன் புயல், பேன், தவளை, வெட்டுக்கிளி போன்றவற்றை அனுப்பி யுத்தம் செய்ததாக திருமறை குர்ஆன் குறிப்பிடுகிறது.
ﻓَﺄَﺭْﺳَﻠْﻨَﺎ ﻋَﻠَﻴْﻬِﻢُ ﺍﻟﻄُّﻮﻓَﺎﻥَ ﻭَﺍﻟْﺠَﺮَﺍﺩَ ﻭَﺍﻟْﻘُﻤَّﻞَ ﻭَﺍﻟﻀَّﻔَﺎﺩِﻉَ ﻭَﺍﻟﺪَّﻡَ ﺁﻳَﺎﺕٍ ﻣُّﻔَﺼَّﻠَﺎﺕٍ .....
(7:133)
உயிர் பிராணிகளையும் கொடிய பூச்சிகளையும் விஷ பாம்புகளையும் கொண்டு மனிதனை அழிக்கும் முறை வளர்ச்சிகண்டு அது நுண்ணங்கிகளையும், வைரஸ் (Virus) கிருமிகளையும் கொண்டு அழிக்கும் (Biological warfare/ bio war) உயிரியல் யுத்தமாக பரினமித்திருக்கிறது.
இவ்வுயிரியல் யுத்தம் 20ம் நூற்றாண்டில் யுத்தங்களில் உபயயோகப்படுத்தப்பட்டன ஆனால் இன்றைய 21ம் நூற்றாண்டு ஒரு நாட்டை ஒரு நாடு காலணிப்படுத்தவும், சர்வதேச வியாபாரமாகவும் மாறுபட்டு நிற்கிறது.
இவ்வுயிரியல் யுத்தம் 3 முறைகளில் நிகழ்த்தப்படுகிறது.
1.நுண்ணுயிர் :- கொடிய நுண்கிருமிகளை நீர்நிலைகளில் கலத்தல், உணவுகளில் கலத்தல், கால்நடை, பிராணிகளினுள் உட்செலுத்தி மக்களிடையே பரப்பல், பிணங்களுக்குள் செலுத்தி பிணத்தை புதைத்தல் என்பனவற்றின் மூலம் கொடிய உயிர் கொல்லி நோய்க்கிருமிகளை பரப்புதல்.
2.பூச்சி வண்டு:- கொடிய விஷ பூச்சி வண்டுகளை விமானம் மூலம் தூவி விவசாய உற்பத்தியை அழித்தல்.
3.வைரஸ் கிருமிகள்:- உயிரை கொல்லக்கூடிய வைரஸ்களை விமானம் மூலம் அல்லது ஏவுகணை போன்று வடிவமைத்து அதனை வான்வெளியில் வெடிக்கச்செய்து அதனூடாக கிருமிகளை பரப்பி திடீர் மரணங்களை ஏற்படுத்தல்.
இப்படி பரப்பப்படும் கொடூர உயிர்க்கொல்லி கிருமிகள் தொடுகை, உணவு, சுவாசம் ஆகிய வழிமுறைகளில் பரவுகிறது. இவ்வுயிரியல் யுத்தம் தொடர்பாகவும் அதன் வழிமுறைகள் அதன் வகைகள் அதன் விளைவுகள் என ஆழமாக "Six legged soldiers " எனும் நூலில் A ஜெப்ஃரி எழுதியிருக்கிறார் இதனை "Oxford " பல்கலைக்கழகம் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்து.
சின்னம்மை
-------------------------
"சின்னம்மை " என்பது ஒரு கொடிய உயிர் கொல்லி நோயாகும். இதனை ஏற்படுத்தும் கிருமி Chicken phox Virus (சிக்கன் பொக்ஸ்) ஆகும். இது வளியில் பரவும் நோய். இதனை உலகில் பரப்பியவர்கள் ஆங்கிலேயர்கள். ஆனால் அதற்கான ஆதாரங்கள் இல்லை என்றாலும் 1763 ம் ஆண்டு பிருத்தானியாவும் பிரான்ஸும் இன்று கனடா என அழைக்கப்படும் தேசத்திற்காக போரிட்ட வேளை செவ்விந்தியர்களை அழிக்க இந்த கிருமியை பயன்படுத்தினர்.
பிருத்தானிய படைத்தலைமை தளபதி Sir Jeffrey Amherst என்பவனின் உத்தரவின் பேரில் Chicken phox Virus பரப்பட்ட போர்வைகள் செவ்விந்தியர்களுக்கு கிடைக்கும்படியாக வீசப்பட்டன. அதனை எடுத்து உபயோகித்த வேளை சின்னம்மை தொற்று பரவி நோய்க்குள்ளாகி இறந்தனர். இவர்கள்தான் இலங்கையிலும் இந்தியாவிலும் பரப்பவில்லை என்பதை எவ்வாறு நம்பமுடியும்.
பன்றிக்காய்ச்சல்
----------------------------
பன்றிக்காய்ச்சல் என்பது (H1N1 virus) கிருமியால் ஏற்படுவது இதனை அமெரிக்கா தனக்கு எதிரான நாடான பெடல் காஸ்ட்ரோவின் வழிகாட்டலில் வளர்ந்து வந்த கியுபாவில் 1971 ம் ஆண்டு பரப்பியது இதனை பிற்காலத்தில் CIA ஒப்புக்கொண்டது. மீண்டும் கியுப நாட்டு காஸ்ட்ரோவின் எதிரியால் CIA வின் உத்தரவில் பரப்பபட்டது.
மலேரியா காய்ச்சல் (malaria fever)
---------------------------------
மலேரியா என்பது (plasmodium) பிளஸ்மோடியம் எனும் நோய் கிருமியால் வருவது இது 5 வகைகளை கொண்டது.
1. Plasmodium felciperum (பெல்சிபெரம்) - இதுவே 80% சதவீதமானோருக்கு ஏற்படுகிறது இது உயிரை காவுகொள்ளக்கூடியது.
2. Plasmodium vivax (வைவெக்ஸ்)
3. Plasmodium ovale (ஒவலே) இவைகள் இரண்டும் குறைவாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.
4.plasmodium knowlesi (நொலேசி) - இது குட்டை வால் குரங்குகளுக்கு தொற்றக்கூடியது.
5. Plasmodium malaria
இது பறவைகளுக்கு ஏவியன் மலேரியா எனும் நோயை ஏற்படுத்தக்கூடியது.
இந்த நோய்க்கிருமி அனோபிளிஸ் ( Anopheles ) எனும் நுளம்பினூடாக பரவுகிறது.
இதனை 1942ம் ஆண்டு அமெரிக்கா 400 கறுப்பின கைதிகளிடம் செலுத்தி பரிசோதனை செய்தது. இதனால் இது உலகெங்கும் பரப்பபட்டது.
இவைகள் போன்றே இலங்கை, இந்தியா நாடுகளில் பரவிய சிக்கன் குன்யா, மேலும் பறவைக் காய்ச்சல் அண்மையில் உலகை உலுக்கிய சிகா வைரஸ் போன்றன உலக வர்தகத்திற்காக பயன்படுத்தப்பட்டது என்றே கொள்ள வேண்டியுள்ளது. இன்னும் உண்மைகள் வெளிவரும் வரை காத்திருப்போம்.
2ம் உலகப்போரில் ஜப்பானை சேர்ந்த Dr.shiro ishi சீனாவின் மஞ்தரிபா மாநிலத்தில் உள்ள சீன, ரஷ்யா,அமெரிக்க கைதிகள் மீது உயிரியல் கிருமிகளை தொற்ற வைத்து பரிசோதனை செய்வதில் 580,000 பேர் இறந்தனர்.
மற்றும் கொரிய போரில் அமெரிக்காவின் தூர கிழக்காசிய கட்டளைத்தளபதி "மெக் ஆர்தர் " உயிரியல் ஆயுதங்களை உபயோகித்தார். வியட்நாம் -அமெரிக்க யுத்ததில் அமெரிக்கா "Killer insect " எனும் பூச்சி இனத்தை பயன்படுத்தி வியட்நாமின் விவசாயத்தை அழித்தது.
1996 ம் ஆண்டு அமெரிக்கா விமானம் மூலம் கியுபாவில் உயிரியல் ஆயுதங்களை பிரயோகித்து உருளைக்கிழங்கு செய்கையை அழித்தது. அதற்காக கியுபா UNO இல் வழக்குத்தாக்கல் செய்தது.
1990 ம் ஆண்டு ரஷ்யா தனது எதிரி நாடுகளின் கால் நடைகள் மீது விமானம் மூலம் உயிரியல் கிருமிகளை ( Operation ecology) எனும் பெயரில் விசிறிவிட்டது.
ஈராக் - அமெரிக்க யுத்தத்தின் பொழுது அமெரிக்கா கொடிய விஷ தேள்களை சேகரித்து பக்தாத்தில் கொண்டு போய் கொட்டி உயிர் சேதங்களைஉண்டு பண்ணியதுடன் நீர் நிலைகளில் நுண்ணுயிர் கிருமிகளையும் கலந்து உயிரழிவுகளை ஏற்படுத்தியது.
2001 ம் ஆண்டு அமெரிக்காவினால் அமெரிக்காவில் அலுவலகம் ஒன்றில் கடிதம் மூலம் ( ஆந்ரக்ஸ் பக்டீரியா) Anthrax bacteria பரப்பட்டது. இறுதியாக 2009 ம் ஆண்டு 4ம் கட்ட ஈழப்போரின் பொழுது முள்ளி வாய்க்கால், புதுக்குடியிருப்பு பிராந்தியங்களில் இலங்கை இராணுவத்தால் உயிரியல் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன.
இன்றும் சிரியாவில் Bashar Al Asad சிரிய முஸ்லிம்களுக்கு எதிராக உயிரியல் ஆயுதங்களையும், இரசாயன ஆயுதங்களையும் பாவித்து வருவது எவருடைய கண்ணையும் குத்தவில்லை.
1972'1993 ம் ஆண்டுகளில் உயிரியல் ஆயதங்களை, தயாரிப்பது, சேகரிப்பது, பயன்படுத்துவது, விற்பது போன்றவற்றிற்கு எதிரான தடைச்சட்டம் கொண்டு வந்த பொழுது 187 நாடுகள் கைச்சாத்திட்டன.
ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவே சட்டம் இயற்றுவது பின் அமெரிக்காவே மீறுவதும் உலகறிந்த உண்மை. ஆகவே அமெரிக்கா ஊரறிந்த இரகசியமாகவும் அதனை வால்பிடித்த நாடுகள் இரகசியமாகவும் சீனா, ரஷ்யா என்பன ஓரளவு ரகசியமாகவும் உயிரியல் ஆயுதங்களை தயாரிக்கின்றன.
ஆகவே நாம் எமது சூழலை மிகச்சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்திருப்பதோடு நமது கிராமங்களில் உள்ள கால்நடைகள் பிராணிகளில் ஏற்படும் தொற்றுகளை அவதானித்து உடன்சிகிச்சைகளைப் பெறவேண்டும்.
மேலும் எமது விவசாய நிலங்களில் உலவும் பூச்சிகள்,வண்டுகள், கொசுக்கள் என்பவற்றை கண்டறிந்து விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் இன்னும் எமது கிராமங்களில் ஊடுருவும் புதிய வெளிநாட்டுக்காரர்கள் சந்தேக நபர்கள் கண்டறிந்து உரிய பாதுகாப்புடன் வாழ்வோம் வளம் பெறுவோம்..
உசாத்துணை
Wikipedia
Writer ramki@gmail.com
Samakalam.com
No comments:
Post a Comment